Wednesday 11 January 2012

காஷ்மீர் இமாச்சலில் கடும் பனிப் பொழிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வடமாநிலங்களில் நேற்று முன்தினம் கடும் குளிர் வாட்டியது. காஷ்மீர் இமாச்சல் பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வருகிறது. காஷ்மீர், மாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன்தினமும் தொடர்ந்து பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீரில் உள்ள குல்மார்கில் மறை 14.5 பாகை குளிர் பதிவானது.
பனிப்பொழிவு காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் காஷ்மீர் மக்கள் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் ஸ்ரீநகர் உட்பட வடக்கு காஷ்மீரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் சீரானது.
இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக சிம்லா உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து தடைப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் 1000 செ.மீ. பனிப்பொழிவு பதிவானது. இதனால் இரு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டில்லியிலும் குளிர் நிலவியது.
அங்கு குறைந்தபட்ச வெப்ப நிலை 8.4 பாகையாக பதிவானது. உ.பி.யிலும் கடும் குளிர் காற்று வீசியது. பஞ்சாபிலும் கடும் குளிர் வாட்டியது. அமிர்தசரசில் 0.4 பாகை குளிர் பதிவானது. வடமாநிலங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 comments: