Sunday 8 January 2012

துக்ளக் இதழின் 43வது ஆண்டு விழாவில் அத்வானி, மோடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக கூட்டணி அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு அறிகுறிகள் தெளிவாகத் தெரியத்
தொடங்கி இருக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் அரசியல் குரு என்று வர்ணிக்கப்படும் அரசியல் விமர்சகர் சோ, தன்னுடைய துக்ளக் இதழின் 43வது ஆண்டு விழாவை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கோலாகலமாக தைப் பொங்கல் அன்று நடத்துகிறார்.
பாஜகவின் முன்னாள் மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய திரு சோ, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 14ம் தேதி நடத்தும் அந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் அத்வானியும் பாஜக பெரும் புள்ளியும் குஜராத் முதல்வருமான மோடியும் கலந்துகொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்வானி, நரேந்திர மோடி இருவருக்கும் பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதால் அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டு உள்ளது. தமிழக அரசின் முழு ஆதரவுடன் பெரும் பாது காப்பு ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.
அந்த வள்ளுவர் கோட்டத்து விழா வெறும் வார இதழ் நிகழ்ச்சியாக மட்டும் இராது என்றும் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரங்கமாக அந்த விழா மேடை இருக்கக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டை ஆளும் அதிமுக முதல்வருக்கு மிகவும் அணுக்கமாக இருக்கும் துக்ளக் சோ, அதிமுக-பாஜக கூட்டணிக்கு இந்த விழாவில் அஸ்திவாரம் போடப் போகிறார் என்று கருதப் படுகிறது.
அண்மையில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை பொற்காலம் என்று வர்ணித்த தையும் அத்தகைய பொற்காலம் கனிய அரும்பாடுபடும்படி தன் கட்சியினருக்குக் கோரிக்கை விடுத்ததையும் கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வென்றால் ஜெயலலிதாவுக்குப் பிரதமர் பதவி கூட கைகூடி வர வழி இருக்கிறது என்பது துக்ளக் சோவின் கணக்கீடாகத் தெரிகிறது

1 comments:

said...

ENTHA MANMOHANSINGH GOVT POI
BJP THALAIMAIYINALA AATCHI
VAND NAADU URUPPUDUM