Wednesday 11 January 2012

சச்சினுக்கு மனோதத்துவ ஆலோசனை தேவையா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சச்சின் 100 வது சதம் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார். இதற்கு தீர்வு காண, விளையாட்டு மனோதத்துவ நிபுணரிடம் அறிவுரை
பெறலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரஷித் லத்தீப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் இதுவரை 99 சதங்கள் அடித்துள்ள இவர், சர்வதேச அளவில் 100 வது சதம் அடிக்க காத்திருக்கிறார்.
இந்த மைல்கல்லை எட்ட முடியாமல் மிக நீண்ட காலமாக தவிக்கிறார். தற்போதைய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், சதத்தில் சதம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலிரண்டு டெஸ்டில் இரு முறை அரைச்சதம் கடந்த போதும், சதம் அடிக்க முடியவில்லை.
இது குறித்து லத்தீப் கூறியதாவது:- அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் சேர்த்து, கடந்த 10 மாதங்களாக சச்சின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். நல்ல “பார்மில்” இருக்கிறார். சரியான நேரத்தில் பந்தை அடித்து விளையாடுகிறார்.
இவரது “புட்வொர்க்” சிறப்பாக இருக்கிறது. எவ்வித சிரமும் இல்லாமல் ஓட்டம் எடுக்கிறார். ஆனாலும், 100 வது சதம் தான் அடிக்க முடியவில்லை. இதனால் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். இது மனதளவில் ஒருவிதமான தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதிலிருந்து விடுபடும் பொருட்டு, ஒரு விளையாட்டு மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம். உலகின் பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கூட, மனத்தடை நீங்க, மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை தேவைப்பட்டுள்ளது. இந்த தொடரிலேயே சச்சின் 100 வது சதம் அடிப்பார் என நம்புகிறேன்.
அவுஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் தோல்விக்கு அனுபவ துடுப்பாட்ட வீரர்களை மட்டும் குறை சொல்கின்றனர். அவுஸ்திரேலிய அணியை இரு முறை சகல விக்கெட்டையும் இழக்கக் கூடிய அளவுக்கு திறமையான பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜாகீர் கானை தவிர மற்றவர்களின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஹர்பஜனை நீக்கியது பெரிய தவறு. அஷ்வின் இன்னும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு லத்தீப் கூறினார்.

0 comments: