Thursday 5 January 2012

கச்சா எண்ணெய் விலை உயருகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் உள்ள ஹேர்முஸ் கடற்படை தளத்தில் 10 நாள் போர் பயிற்சி ஒத்திகை நடத்தியது. அப்போது ஈரான் போர்க் கப்பலில் இருந்த குறைந்த தூரம், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. போர் ஒத்திகை நடந்ததால் அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த வழியாக செல்ல விரும்பவில்லை.  இந்த நிலையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் திரும்பவும் நுழையக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த பிரச்சினையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஹேர்முஸ் துறைமுகம் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  தற்போது இந்த வழி அடைக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.

0 comments: