Wednesday 4 January 2012

விமானிகளின் தூக்கத்தால் மும்பை செல்ல வேண்டிய விமானம் கோவா சென்றது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துபாயிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் இரு விமானிகளும் தூங்கி விட்டதால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின்னர் தற்போது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு, துபாயிலிருந்து 100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.
பின்னர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால் கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கி விட்டு முதலில் ஒரு விமானி தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை விமானியும் தூங்கி விட்டார்.
இதையடுத்து மும்பை விமான கட்டுப்பாட்டு நிலையம் விமானத்தைத் தொடர்பு கொண்டதும் விமானத்திலுள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர்.
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் மும்பை வான்வெளியைத் தாண்டி கோவாவுக்குப் பாதி தூரம் வரை போய் விட்டது. இதையடுத்து இரு விமானிகளும் விமானத்தை திருப்பி மும்பையில் தரையிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டு 158 உயிர்களை பலி கொடுத்த மங்களூர் விமான விபத்து விமானிகளின் தூக்கத்தால் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments: