Wednesday 21 December 2011

போர்க்கப்பலை பார்வையிட்டார் இந்திய ஜனாதிபதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் அணி வகுப்பு மும்பை  அருகே உள்ள  கடற்படை தளம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 81 போர்க்கப்பல்களும், 44 கடற்படை  விமானங்களும் கடலோர காவல் படையினரின் விரைவு படகுகளும் பங்கேற்றன. மேலும் நீர் மூழ்கி கப்பல்களும் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டன. இந்த அணிவகுப்பின் போது கடற்படையினரின்  சாகச நிகழ்ச்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன. இந்த கப்பல்கள் அணி வகுப்பின் போது  ஐ.என். எஸ். சுபத்ரா என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலில் பிரதீபா பாட்டீல் பயணித்தார். அவருடன்  மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் மற்றும் முப்பைடகளின்  தளபதிகளும்  4 மத்திய அமைச்சர்களும் அதே கப்பலில் பயணித்தனர். ஏற்கனவே சுகோய்  என்ற அதி நவீன இந்திய விமான படை  விமானத்தில் பயணம் செய்த பிரதீபா பாட்டீல் அடுத்து தரை படையின்  டாங்கி ஒன்றிலும்  பயணித்து  சாதனை படைத்துள்ளார். இப்போது 3 வது முறையாக  போர்க்கப்பலிலும் பயணித்து  பிரதீபா பாட்டீல் சாதனை புரிந்துள்ளார். சுபத்ரா கப்பலில் பயணித்த பிரதீபா பாட்டீல் கடற்படையினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். கடற்படை சின்னத்துடன் கூடிய ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்து அவர்  இந்த கப்பல்களின் அணி வகுப்பை பார்வையிட்டார். பிரதீபா பாட்டீலுக்கென்றே பிரத்தியேகமாக இந்த மேடை சுபத்ரா கப்பலில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு துவங்கின. அப்போது  150கடற்படை வீரர்களின்  அணி வகுப்பு மரியாதையை பிரதீபா பாட்டீல் ஏற்றுக்கொண்டார்.  ஜனாதிபதிக்கு வழங்கப்படும் 21 குண்டுகள்  முழக்கமும் நடத்தப்பட்டது. நாட்டின் முப்படைகளுக்கும் ஜனாதிபதிதான் தலைவர் என்பதால் அவருக்கு  வழக்கமாக இந்த 21 குண்டு முழக்க மரியாதை கொடுக்கப்படுகிறது. சுபத்ரா கப்பலில் அமர்ந்திருந்தபடி அவர் கடற்படைகளின்  அணி வகுப்பை பார்வையிட்டார். முதன் முதலாக அக்ராய  என்ற  நீர் மூழ்கி கப்பலை அவர் பார்வையிட்டார். அப்போது அந்த கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் ஜனாதிபதி  வாழ்க ( ராஷவ்டிரபதிஜி ஜெய்  ) என்று முழக்கமிட்டனர். அதன் பிறகு ஒவ்வொரு கப்பலாக அணி வகுத்து சென்றன. அப்போது ஜனாதிபதி எழுந்து நின்று ஒவ்வொரு கப்பலுக்கும்  அதில் சென்ற வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தினார். மேலும் கடற்படையினரின் சாக நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார்.
பிறகு  கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா பாட்டீல்  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு  கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளின் பணி முக்கியமானது என்று கூறினார்.
கடல் வழியாக பல வர்த்தகங்கள் நடப்பதால்  கடற்கொள்ளையர்களை முறியடிப்பதிலும் நமது கடற்படையும்  கடலோர காவல் படையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

0 comments: