Thursday 22 December 2011

3” பட வெளியீட்டு விழாவுக்கு ரஜினி, கமல் வருகை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 படத்தின் இயக்குனர் செளந்தர்யாவும் அவரது கணவரும் அப்படத்தின் கதாநாயகனுமான தனுஷும் 'கொலவெறி' புகழ் '3' படத்தின் பாடல்
வெளியீட்டு விழா குறித்த விவரங்களை முடிந்தவரை மர்மமாகவே வைத்திருக்கிறார்கள்.

இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமை ஏகப்பட்ட விலைக்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

பாடல் வெளியிட்டு விழா நடக்கும் இடம்: பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள புனித ஜாரஜ் பள்ளி மைதானம்.

விழாவுக்கு சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்பதை இதுவரை சொல்லவில்லை. ரஜினியும் அவர் நண்பர் கமலும் இந்த விழாவுக்கு வருவார்கள் என்பதுதான் இவ்விழாவின் உச்சம். காரணம் ரஜினியின் மூத்த மகள் இயக்க, கமலின் மூத்த மகள் ஹீரோயினாக நடித்துள்ள படம் இது. எனவே இருவரும் கட்டாயம் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்விருவரும் வரப் போவதை ரசிகர்களுக்குச் சொல்லாவிட்டாலும், சன் டிவிக்கு சொல்லியிருப்பதால்தான், இதுவரை எந்த ஆடியோ வெளியீட்டுக்கும் தராத அளவு தொகை 3 பட இசை வெளியீட்டுக்குத் தரப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுக்கிசுக்கப்படுகிறது.

நாளை மாலை நடக்கும் இந்த விழாவுக்கு, 'ஒய் திஸ் கொலவெறிடி' என்ற உலகமகா இலக்கியப் பாட்டை மாய்ந்து மாய்ந்து பிரபலமாக்கி, ஒன்றரை கோடி பேரை பார்க்க வைத்த பத்திரிகையாளர்களுக்குக் கூட அழைப்பில்லை என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.