Monday 19 December 2011

ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை
மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)
2. ம.நடராஜன்
3. திவாகர் (மன்னார்குடி)
4. டி.டி.வி. தினகரன்
5. வி. பாஸ்கரன்
6. வி.எம்.சுதாகரன்
7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்
8. எம்.ராமச்சந்திரன்
9. ராவணன்
10. மோகன் (அடையாறு)
11. குலோத்துங்கன்
12. ராஜராஜன்
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.  கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
ஏன் இந்த நீக்கம்?

தற்போது தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா ஆட்சியில், சசிகலாவின் தலையீடு அதிமாக இருந்தால் இந்த அதிரடி முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் திட்ட அமலாக்கத்துறையிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை நியமிக்கப்பட்டதற்கு சசிலாகவே காரணம் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நியமனத்தில் சசிகலாவின் தலையீடு அதிகமாக இருந்தால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

0 comments: