Sunday 18 December 2011

பிடித்தமான செல்போன் எண்ணை தேர்வு செய்ய பிஎஸ்என்எல் புதிய திட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு லட்சம் செல்போன் எண்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். உதவி பொதுமேலாளர் ஆர்.ரகுநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

'பிடித்தமான செல்போன் எண்ணை தேர்வு செய்யுங்கள்'' என்ற புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் கடந்த 16ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, கொடுக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் எண்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான எண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை பெறுவதற்கு பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் இணையதளத்தில் (www.tamilnadu.bsnl.co.in) சென்று `சூஸ் யுவர் மொபைல் நம்பர்ஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டு உள்ள செல்போன் எண்களில் இருந்து பிடித்தமான ஒரு நம்பரை தேர்வுசெய்ய வேண்டும்.

அப்போது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு புதிய எண் தொடர்பான 7 இலக்க ரகசிய குறியீட்டு எண் (பின் நம்பர்) எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். தேர்வுசெய்துள்ள செல்போன் எண்ணை உறுதி செய்வதற்கு இந்த பின் நம்பரை குறிப்பிட வேண்டியது அவசியம்.

0 comments: