Tuesday 6 December 2011

கடத்தப்பட்ட 22 டைனோசர் முட்டை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2009ஆம் ஆண்டிலிருந்து இது போன்ற கடத்தப்பட்ட முட்டைகளை அமெரிக்கா திருப்பித்
தருவது இது மூன்றாவது முறை என அமெரிக் காவுக்கான சீன தூதரக அதிகாரி கியுஷாஃபாங் தெரிவித்துள்ளார்.
இந்த முட்டைகள் ஒவிராப்ட்டர் வகையைச் சேர்ந்தது என்றும், சீனாவின் தெற்குப் பகுதி யிலுள்ள குவாங்டங் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றது எனவும் சீனாவின் புவியியல் அருங் காட்சியகம் தெரிவித்தது. கடத்தப்பட்ட 22 டைனோசர் முட்டைப் படிவங்களை அமெரிக்கா திருப்பி தந்தது.
இந்த முட்டைப் படிவங்களின் வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என கருதப் படுகிறது. ஏலம் விடப்படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகத் தெரிகிறது.
இந்த முட்டைப் படிவங்கள், அமெரிக்காவின் சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளால் 2007ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. இதில் இன்னும் 19 முட்டைகளில் உயிர்பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுறு உயிர் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.