Wednesday 16 November 2011

கலைஞர் தொலைக்காட்சி சொத்துக்கள் முடக்கப்படும்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கலைஞர் டி.வியின் சொத்துகளை முடக்க அமலாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றையை முறைகேடாக பெற்ற டி.பி. ரியாலிட்டி உரிமையாளர் ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலிகோம் நிறுவனத்தின் துணை நிறுவனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அண்ட் வெஜிடெபல்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகிய தனது நிறுவனங்களின் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 200 கோடியை வழங்கியுள்ளது.
முதலில் குசேகாவ்ன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபல்ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட இப்பணம் அடுத்து கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இறுதியாக இப்பணம் கலைஞர் டி.விக்கு வந்து சேர்ந்தது.
ஆயினும் சி..பி.ஐ-யின் விசாரணை வேட்டையின் போது, இப்பணத்தை சினியுக் நிறுவனம் தங்களுக்குக் கடனாகவே வழங்கியதாகவும், அப்பணத்தை மீண்டும் வட்டியோடு ரூ 214 கோடியாக திருப்பித் தந்து விட்டதாக கலைஞர் டி.வி கூறியதை அதிகாரிகள் நம்பத் தயாராக இல்லை.
2ஜி விவகாரத்திலிருந்து தப்புவதற்காகவே, கலைஞர் டி.வி அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் காட்டுவதாக சி.பி.ஐ கூறுகிறது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது கலைஞர் டி.வி, குசேகாவ்ன் புரூட்ஸ் அண்ட் வெஜிடெபல்ஸ் மற்றும் சினியுக்  நிறுவனங்களின் ரூ.13.5 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
இந்த உத்தரவின் வழி இம்மூன்று நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments: