Thursday 17 November 2011

தமிழக மக்களுக்கு ஆப்பு தொடரும் விலை உயர்வு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு
28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து
60 பைசாவாக உயர்ந்துள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது. சென்னை மாநகரை தவிர பிற நகரங்களில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 7 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயருகிறது. சென்னையில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 12 லிருந்து ரூ. 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.24 க்கு விற்க்கப்படும். இது அட்டைதாரர்களுக்கும் பொருந்தும்.
மேலும் விரைவில் மின்சார கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசு முடிவெடுக்கும் என் அஞ்சப்படுகிறது.

0 comments: