Wednesday 30 November 2011

கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கனிமொழியை வரவேற்கக் காத்திருப்பதாக செய்தி யாளர்களிடம் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்திருக்கிறார் திமுக தலை வரும் முன்னாள் தமிழக முதல் வருமான திரு கருணாநிதி. கனிமொழிக்கு பிணை கிடைத்துள்ளது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கனிமொழி கவலையால்தான் கருணாநிதி இதுவரையிலும் சோர் வுடன் காணப்பட்டார். அவரது வழக்கமான அதிரடி அரசியல் அமைதியாக இருந்தது. கனி வந்த தும் இனி அவரது அதிரடி அரசியலில் அனைத்துக் கட்சிகளையும் கதிகலங்க வைப்பார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரையிலும் தூக்கத்தை மறந்து இருந்த கருணாநிதி, இனி பல கட்சி தலைவர்களது நிம்மதி யான தூக்கத்தை இழக்க வைக்கப் போகிறார் என்கின்றனர் தமிழக அரசியல் நோக்கர்கள். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக் கில் ஆறு மாதங்களுக்கு மேலாக திகார் சிறையில் இருந்து வெளி யாகும் எம்.பி. கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பைக் கொடுக்கப்பட என்று கூறப்படுகிறது. கனிமொழி உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களில் ஒரு வராகவும் மாநிலங்களவை உறுப் பினராகவும் இருந்து வருகிறார். இப்போது கனிமொழிக்கு, ஆற்காடு வீராசாமி வகித்து வரும் தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் பதவி அல்லது சற்குணபாண்டியன் வகித்து வரும் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவருமே கனிமொழிக் காக பதவியை விட்டுத் தர முன் வந்துள்ளனர். இது தவிர்த்து கனிமொழிக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதுவரை அமைதியான முறை யில் அரசியலில் ஈடுபட்டு வந்த கனிமொழி இனி அதிரடியாகச் செயல்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசியலிலேயே அதிகக் கவனம் செலுத் துவார் என்று அவரது ஆதர வாளர்கள் கூறுகின்றனர். டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதம் கூடவிருக்கும் திமுக பொதுக் குழு கூட்டத்தில் கனி மொழி, மு.க.ஸ்டாலின் ஆகி யோருக்கு முக்கிய பதவி அளிக் கப்படும் என திமுக தரப்பில் கூறப் படுகிறது. இந் நிலையில் திமுக வெளி யிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடை முறைகளை முடித்து விட்டு அவர் டிசம்பர் 3ம் தேதி சென்னை வரு வார் என்றும், டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 comments: