Thursday 1 December 2011

77 பேரைக் கொன்ற ஒரு மனநோயாளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நோர்வேயில், கடந்த ஜுலை மாதம் 77 பேரைச் சுட்டுக் கொன்ற கொலைக் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் ஒரு மனநோயாளி என அந்நாட்டு உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த ஜுலை மாதம் பிரதமர் அலுவலகம் முன் ப்ரீவிக் என்பவர் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து அருகிலுள்ள தீவில் நடந்து கொண்டிருந்த ஆளும் கட்சி இளைஞர் அணி பயிற்சி முகாமில் 77 பேரைக் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.
விசாரணையில் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட ப்ரீவிக், அக்கொலைகள் நியாயமானவையே என வாதாடினார்.
அவரை உளவியல் நிபுணர்கள் 13 முறை பரிசோதித்து, அவருடன் பேசிப் பார்த்தனர். இறுதியில் சம்பவம் நடந்த அன்று அவர் மனப் பிறழ்வுக்கு ஆளாகியிருந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மனப் பித்து நோய் எனப்படும் ஸ்கிசோப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர். இந் நோய், மல்டிபிள் பெர்சனாலிடி மற்றும் ஸ்பிளிட் பெர்சனாலிடி போன்ற மன நிலைகளில் இருந்து மாறுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந் நோயால் பாதிக்கப் பட்டவர், நடைமுறை உலகில் இருந்து விலகி, கற்பனையான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார். அவருக்கு மட்டும் வினோதமான ஒலிகள் கேட்கும், எப்போதும் மனப் பிரமையில் ஆழ்ந்திருப்பார்.

1 comments:

said...

மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...