Wednesday 30 November 2011

சென்னை: 10,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் சென்னை நகரம் மிகவும் மோசமான பாதிப்பைக் கண்டுள்ளது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள நீரால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பல வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், கல்விக் கூடங்களிலும் தற்காலிக முகாம்களிலும் சமூகக் கூடங் களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்யும் மழையால் சென்னையின் வட பகுதியே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தாகக் கூறப்படுகிறது. புழல் ஏரி மடை திறந்து விடப்பட்டுள்ள தால் மணலி அருகே எம்எப்எல் ரவுண் டானா பகுதியில் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல் கின்றன. மேலும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. திருவொற்றியூர் கார்கில் நகர், ராஜாஜி நகர், சண்முகபுரம், கலைர் நகர், அண்ணாமலை நகரில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மணலி, ஆமுல்லைவாயில், வைக்காடு கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மணலியில் இருந்து ஆமுல்லைவாயில் கிராமத்திற்கு செல்லும் தரைபாலத்தில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேளச்சேரி ஏ.ëஜ.எஸ்.காலனி, நேத் தாஜி நகர், மகாலட்சுமி நகர், ஆண் டாள் நகர், இ.பி.காலனி உள்பட நூற்றுக் கும் அதிகமான தெருக்களில் மழைநீர் முழங் கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளா னார்கள். உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிக்குட் பட்ட ராம் நகர், சீனிவாச நகர், பாலாஜி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை, சாலைப் பணிகள் என குண்டுங் குழியுமாக சாலைகள் பெயர்க்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த மழையால் அவ்விடங்கள் சேறும் சகதியு மாகக் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் அப்புறப்படுத்தப்படாததால் கொசுக்கள் பெருகியுள்ளன. பல இடங்களில் பாம்பு களும் பெருக்கெடுத்து அலைகின்றன. சென்னையில் மழையால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக முதல்வர் ëஜயலலிதா நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சாரங்கி மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். வேளைப்பளு அதிகரித்து விட்டதால் சில வாரங்களுக்கு ஓய்வு எடுப்பதற்காக இன்று கொடநாடு செல்கிறார். அங்கிருந்த படியே அவர் அரசுப் பணிகளை மேற் கொள்வார் என தமிழக அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. அவருடன் அவரது தோழி சசிகலாவும் செல்கிறார்.

0 comments: