Monday 21 November 2011

எட்டு ஆண்டுகளின் பின் ஷார்ஜாவில் ஒரு நாள் போட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்றது
. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஷார்ஜா மைதானத்தில் முன்னணி அணிகள் இரண்டு நேற்று முதல் முறையாக பலப் பரீட்சை நடத்தின.
இதற்கு முன்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஷார்ஜாவில் சிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதனைத் தொடர்ந்து இந்த மைதானத்தில் எந்த முன்னணி அணியும் கடந்த 8 ஆண்டுகளில் மோதவில்லை.
எனினும் கனடா - ஆப்கானிஸ்தான் அணிகள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இரு ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளன.
இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து முன்னணி அணிகள் நேற்று இந்த மைதானத்தில் முதல் முறையாக களமிறங்கின.
நேற்றைய போட்டியானது ஷார்ஜாவில் நடைபெறும் 201 ஆவது ஒருநாள் போட்டியாகும். ஏற்கனவே அதிகப்படியான ஒருநாள் சர்வதேச போட்டிகளை நடத்திய உலக சாதனை ஷார்ஜா மைதானத்தையே சாரும். இந்த வரிசையில் சிட்னி மைதானம் 138 போட்டிகளை நடத்தி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இலங்கை அணிக்கு தீர்க்கமாக அமைந்த நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது போட்டியில் விளையாடிய சுஹைல் தன்வீர் நீக்கப்பட்டு அய்சாஸ் சீமாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று அப்துல் ரஸ்ஸாக்கிற்கு பதில் சொஹைப் மலிக் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கை எந்த மாற்றமும் இல்லாத அணி களமிறங்கியது.
இதன்படி செய்தி அச்சுக்கு செல்லும் வரை போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களை பெற்றிருந்தது.

0 comments: