Tuesday 22 November 2011

பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர், அமைசர்கள் படையெடுப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா நேரில் 3வது முறையாக இன்று ஆஜரானார்.  பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 25 கார்கள் புடைசூழ, சரியாக காலை 10.35 மணிக்கு தனி நீதிமன்ற வளாகத்துக்குள் வந்திறங்கினார் ஜெயலலிதா. பின்னர் நீதிபதி முன்பு 3வது முறையாக ஆஜராகி, அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஜெயலலிதா, சசிகலாவுடன் கோர்ட்டுக்கு அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சம்பத், ரமணா, கோகுல இந்திரா, 10 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா சார்பில் ஆஜராகும் வக்கீல் பி.குமார், ராஜன், வக்கீல்கள் கந்தசாமி, சரவணகுமார் பால் கனகராஜ், விஜயராஜ், திவாகர் வி.எஸ்.சுந்தர் உள்பட 12 வக்கீல்கள் கோர்ட்டுக்குள் சென்றனர். அரசு சார்பில் வக்கீல் ஆச்சார்யா, சந்தேஷ் சவுதா ஆகியோர் ஆஜரானார்கள்.  ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவதையொட்டி எச்.ஏ.எல். விமான நிலை யம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்திருந்தார். சிறை வளாகத்தில் அதிரடிப் படை போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சிறை நுழைவாயில் பகுதியில் உள்ள சாலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டார். அவருடன் தோழி சசிகலா, பணியாளர் ராணி, உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, வீரபெருமாள் ஆகியோர் வந்தனர். இளவரசி மட்டும் வரவில்லை ,  ஜெயலலிதாவை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, கோவை மேயர் செ.ம.வேலுசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வழியனுப்பினர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னதாகவே பெங்களூர் வந்துவிட்டனர்.

0 comments: