Monday 21 November 2011

அதிமுகவிற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேமுதிக தொண்டர்கள் நல்லவர்கள். அவர்களை சீண்ட வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக தெரிவித்தார். மதுரையில் நடந்த தேமுதிக நிகழ்ச்சி ஒன்றில் தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, தமிழகத்தில் பால் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் மத்திய அரசு நிறைய நிதி தருகிறது. இதைச் சொன்னால் நான் காங்கிரசுக்கு ஆதரவானவன் என்று கூறுவார்கள்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த மக்களுக்கு தற்போது ஏமாற்றத்தை தந்துள்ளது அதிமுக அரசு. குடும்ப ஆட்சி போய் தற்போது கும்பல் ஆட்சி நடந்து வருகிறது.
பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்த விஜயகாந்த், தேதி  இடம் விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
யாருக்கும் சகாயம் செய்யாதவர் என்று பெயரெடுத்த மதுரை கலெக்டர் சகாயம் தற்போது ஆளும் கட்சிக்கு சகாயம் செய்கிறார். மதுரை காவல்துறை கமிஷனர் கண்ணப்பன் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்ணப்பன் எங்கு போய் வேலை செய்வார் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
மேலும் தங்களது தொண்டர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களை சீண்ட வேண்டாம் என்றும் விஜயகாந்த் ஆவேசமாக தெரிவித்தார்.

0 comments: