Wednesday 30 November 2011

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்கள் கடலில் வீசப்பட்டன

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6,88, 506 ரூபா பெறுமதியான 22, 500 தேங்காய்கள் கடலில் வீசப்பட்டதாக இலங்கையின்
உள்ளக வர்த்தகத்துறை அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த தேங்காய்கள் அழிக்கப்பட்டு பின்னர் கடலில் எறியப்பட்டதாக அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். 
இந்தியாவில் இருந்து கடந்த வருடம் தேங்காய்கள் இறக்குமதி செய்யப்பட்டன இதன்போது இலங்கையில் தேங்காய்களின் உற்பத்தி சிறந்த முறையில் இருந்தது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை களஞ்சியப்படுத்தி வைக்க முடியாமை காரணமாகவே அவற்றை கடலில் எறிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். 
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ச குறித்த தேங்காய்களை கடலில் எறியாமல் சமுர்த்தி உதவிப்பெறும் குடும்பங்களுக்கு வழங்கியிருக்கலாம் என்று தமது கருத்தை கூறியதாகவும்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments:

Anonymous said...

If coconut production is enough in their country why should they import.