Sunday 27 November 2011

தேசிய கீதத்தைத் தமிழில் பாட இனிப் பயப்படத் தேவையில்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் பேசும் மக்களால் நடத்தப்படும் பொது விழாக்கள், பாடசாலைக் கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்களில் இனி தமிழில் தேசிய கீதத்தைப் பாட பயப்படத் தேவையில்லை
. இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தைத் தமிழில் பாடாவிட்டால் படையினர் பயமுறுத்துவர் என்ற பயம் இருந்து வந்தது. இனி சுதந்திரமாக தமது தாய் மொழியிலேயே தமிழ் மக்கள் இதனை இசைக்கலாம்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மொழி விவகார அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதற்குச் சரியான விளக்கம் தந்துள்ளார். அதனால் இனி தமிழ் பேசும் மக்களது விழாக்களில் தமிழிலேயே தேசிய கீதத்தைப் பாடலாம். நாட்டின் அரசியலமைப்பில் சிங்களத்தில் தான் பாடவேண்டும் என்று சட்டமில்லை என்றும் தமிழ் மக்களை சிங்களத்தில் பாடுமாறு நிர்ப்பந்தித்து வற்புறுத்துவது சட்ட விரோதமானது எனவும் அமைச்சர் வாசுதேவ பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதனைச் சபையிலோ அல்லது வெளியிலோ இதுவரை யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவ்விடயம் இப்போது தெளிவாகியுள்ளது.