Saturday 26 November 2011

அ. தி. மு. க ஆட்சியில் மாற்றம் வரவில்லை ஏமாற்றமே மிஞ்சியது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அ. தி. மு. க. ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த்
தமிழக அரசை கடுமையாக தாக்கினார். பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு ஏற்றியதை கண்டித்து தே. மு. தி. க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் விஜயகாந்த் பேசியதா வது :-
பால் விலை, பஸ் கட்டணத்தை அ. தி. மு. க. ஆட்சி உயர்த்தியுள்ளது. மக்களோடும், தெய்வத்தோடும் தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் பிரச்சினைக்காக தனியாக நின்று போராடிக் கொண்டிருந்தோம். கடந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் நினைத்து என்னை அ. தி. மு. கவுடன் கூட்டணி வைக்க சொன்னார்கள். மக்கள் கூறியதன் அடிப்படையில் தான் அ. தி. மு. க.வுடன் கூட்டணி வைத்தோம்.
அதற்காக நான் தலைகுனிந்தால் கூட தொண்டர்களை என்றுமே தலைகுனிய விடமாட்டேன். பென்னாகரம் இடைத் தேர்தலில் இப்போதைய அ. தி. மு. க. அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்று தேர்தல் பணியாற்றினார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? இப்போது மட்டும் தே. மு. தி. கவினர் எங்கள் தயவில்தான் ஜெயித்ததாக கூறுகிறார்கள். அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் தனியாக நின்று ஜெயித்து காட்டியிருக்க வேண்டியதுதானே.
உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் ஜெயிக்காமலா 10.11 சதவீத ஓட்டுகள் வாங்கினோம். மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே கட்சியை தொடங்கினேன். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். இவர்கள் ஆட்சியில் செத்தவன் வாயில் கூட பாலுக்கு பதிலா தண்ணியத்தான் ஊத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி கொடுத்ததாக ஜெயலலிதா கூறினார். இப்ப கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டதாக கூறுகிறார்.
நிர்வாகம் சரியாக செயல்பட்டால் எப்படி நஷ்டம் வரும். ஒருபுறம் மின்கட்டணம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் சொட்டு நீர்ப்பாசனம் வைத்தால் இலவச மின்சாரம் என்கின்றனர். அப்படி இப்படி பேசி கொள்ளையடிக்கிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் நல்லது பண்ணவில்லை. இலவசம் என்று சொல்லி மக்களை ஏமாத்தாதீர்கள். இப்ப தெரியுதா உங்க தலையில் கையவைச்சுட்டாங்க.

1 comments:

said...

தெரிந்து கொண்டேன் நண்பரே! நன்றி!