Tuesday 22 November 2011

ஷாருக்கான் அளித்த காரை வாங்க மறுத்த ரஜினி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போன்று எளிமையான மனிதரை கண்டதில்லை என நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

பாலிவுட் கதாநாயகன் ஷாரூக்கான் நடித்து தீபாவளி அன்று வெளியான படம் ரா ஒன். இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சிக்கு நடித்தார்.
படத்தை தென் இந்தியாவில் வெளியிட நினைத்து ஷாருக்கான் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்தார். மேலும் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நடித்தால் தென்னிந்தியாவில் வசூல் அள்ளி விடலாம் என நினைத்த ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பெருந்தன்மையுடன் நடித்து கொடுத்தார். இதனையடுத்து தனக்காக நடித்த ரஜினிக்கு பி.எம்.டபிள்யூ 7 சீரியஸ் காரை பரிசாக தருவதாக அறிவித்தார்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு இந்த பரிசு வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாருக்கான் இப்படியொரு எளிமையான மனிதரை நான் திரையுலகில் கண்டதில்லை என்று கூறினார்.

0 comments: