Saturday 19 November 2011

சாதித்துக் காட்டிய இந்திய பெண் விஞ்ஞானி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அண்மையில் 3,500 கிமீ தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி-4 என்ற ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. அக்னி-4 ஏவுகணைத் திட்டமானது டெஸ்ஸி தாமஸ், 48, (வலப்படம்) என்ற பெண் விஞ்ஞானியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவர்தான் இந்திய தற்காப்பு ஆராய்ச்சி, உருவாக்கக் கழகத்தின் (டிஆர்டிஓ) முக்கிய திட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் விஞ்ஞானி ஆவார். இந்திய ஏவுகணைத் திட்டங்களில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம் உள்ள நிலையில் அதைத் தகர்த்து பெண் விஞ்ஞானியாக இந்தத் திட்டத்தின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பரில் அக்னி-2 பிரைம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணையின் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.

0 comments: