Thursday 10 November 2011

ஐ.பி.எல் விவகாரம்: ஷாருக்கானிடம் விசாரணை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஐ.பிஎல் வீரர்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கும் ஷாருக்கானிடம் அந்த பணம் எப்படி வந்தது என அமலாக்க அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஐ.பி.எல் 20 ஒவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்கான் இந்த அணிக்கு விளையாட சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும் அணி வீரர்களின் பயிற்சி மற்றும் பராமரிப்புக்காகவும் பெருந்தொகையைச் செலவு செய்துள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து அமைக்கப்பட்டுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் போட்டியிலும் கலந்து கொண்டது. இதற்காக கோடிக்கணக்கான பண பரிமாற்றம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
இதனிடையே நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவரின் நிறுவனத்திலிருந்து ஷாருக்கானின் நிறுவனத்திற்குப் பணம் கைமாறியுள்ளது, தெரியவந்துள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, நடிகர் ஷாருக்கான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.