Wednesday 2 November 2011

ஆள்சேர்க்கும் திமுக; களையெடுக்கும் அதிமுக

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முக்கிய பிரமுகர்களின் பதவி விலகல் தொடர்வதால், புதிய உறுப்பினர்களைச் சேர்த்து திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தொண்டர் களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதே வேளையில், அண்மை யில் நடந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை செய்தோரைக் களை யெடுக்கும் முயற்சியில் அதிமுக தலைவர் ஜெயலலிதா  ஈடுபட்டு உள்ளார்.
திமுக கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை எனக்கூறி அக்கட்சியின் முன்னாள் அமைச் சர் பரிதி இளம்வழுதி தமது துணைப் பொதுச் செயலாளர் பதவியைத் துறந்தார். திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதி ராகவே அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார் எனவும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த கருணாநிதி தயாராக இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நெல்லை மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜாவும் திடீரென விலகியது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கட்சித் தலைவர்களும் விலகி வருவது கருணாநிதிக்கு நெருக் கடியை அளித்துள்ளது.
கொள்கை பரப்புச் செயலாள ராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் கடந்த ஆறு மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். இதனால் அவரை அப்பொறுப்பில் இருந்து விடு விப்பது குறித்தும் திமுக தலைமை யோசித்து வருவதாகக் கூறப் டுகிறது.
இந்த நெருக்கடிகளை எல் லாம் சமாளிக்கும் வகையில் திமுகவுக்குப் புது ரத்தம் பாய்ச்சிட புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, குறைந்துள்ள தொண்டர் பலத்தை அதிகரிக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “திமுகவுக்கு 62 வயதாகிறது.  தொண்டர்கள் ஓய்வு நேரத்தைச் சுருக்கி, உழைக்கும் நேரத்தை விரிவாக்கி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியைக் கூட நாம் பிடிக்கவில்லை. வீழ்ந்தது திமுக, இனி எழுவது சிரமம்தான் என எதிர்க்கட்சியினர் எக்காளம் இடுகின்றனர். தனித்து விடப்பட்ட போதும், ஊக்கத்துடனும் உறுதி யுடனும் செயல்பட்டு வெற்றியை ஈட்டவேண்டும். வெறியோடு செயல்படும் எதிரிகளை வீழ்த்த நாம் ஒற்றுமையோடு உழைப்போம். அணி அணியாக உறுப்பினர் களைச் சேர்ப்போம். புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைப்போம்,” என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில், திருச்சி இடைத்தேர்தல் மற்றும் உள் ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வேலை செய்தவர்களைக் கட்சியில் இருந்து துரத்தும் பணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ளார்.
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறி விக்கப்பட்ட பரஞ்சோதிக்கு எதி ராக அவரது இரண்டாவது மனைவியே புகார் கொடுத்தார். பின்னர் தம் கணவருடன் சமரசம் ஆனார். ஆனால், புகார் அளிக்க அவரை முடுக்கிவிட்டது அதிமுக வினரே எனப் பேச்சு அடிபட்டது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உட னடியாக நடவடிக்கை எடுக்கப் படாவிட்டாலும், இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் சிவபதியிடம் இருந்து அப்பதவி பறிக்கப்பட்டது.
அதேபோல், போடி நகராட்சித் தலைவர் பதவிக்கு தங்க தமிழ்செல்வன் ஆதரவாளரும், அவரை எதிர்த்து அமைச்சர்
ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதர வாளரும் போட்டியிட்டனர். எதிர்த்து நின்றதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வெற்றி பெற்றார்.
ஆத்திரமடைந்த தங்க தமிழ் செல்வனின் ஆதரவாளர்கள் பன்னீர் செல்வத்தின் வீடு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக தேனி மாவட்ட அதிமுக செயலர் பதவி தங்க தமிழ்செல்வனிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கோவை மேயராகப் பொறுப் பேற்றுள்ள செ.ம. வேலுசாமிக்கு மாவட்டச் செயலர் பதவி மீண்டும்  அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்ததாக எழுந்த புகாரால் மலரவனை விட்டு அப்பதவி பறிபோனது.
பிற மாவட்டங்களிலும் இந்தக் களையெடுப்பு தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், யார் பதவி பறிபோகும், யாருக்கு பொறுப்பு கிடைக்கும் என்ற கலக்கம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   

0 comments: