Wednesday 2 November 2011

உலகத் தமிழ் மாமணி விருது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த மாதம் துபாயில் நடைபெற்றது. சென்னை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு அந்த மாநாட்டை நடத் தியது.
தமிழர்களுக்கான வளர்ந்து வரும் வணிக வாய்ப்புகள், இந்தியா விலும் வளைகுடா நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள், வணிகத் தொடர்புக்குத் தமிழ் மொழியும் வணிகத் தொழில் நட்பமும், ஊட கங்களில் உள்ள வணிக வாய்ப்பு கள் என பல்வேறு தலைப்புக்களில் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட்டன.
நான்கு நாள் நீடித்த அந்த மாநாட்டின் முடிவில் ஒன்பது பேருக்கு ‘உலகத் தமிழ் மாமணி’ என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
அதில் மலேசியாவின் முன் னாள் அமைச்சர் திரு சாமிவேலு வும், சிங்கப்பூர் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் திரு ப திருநாவுக்கரசுவும் அடங் குவர்.
சிங்கப்பூரின் அரசாங்கமும் மக்கள் கழகமும் எவ்வாறு இணைந்து மக்கள் நலப் பணிகளை மேற்கொள்கின்றன என்பது பற்றி திருநாவுக்கரசு மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.
“இந்த விருது மக்கள் கழகத் தில் செயலாற்றும் அத்தனை தொண்டூழியர்களுக்கும் உரித்தா னது,” என்று திருநாவுக்கரசு கூறி னார்.
இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரியா, மலேசியா, மொரிஷியஸ், துபாய், ஆஸ்தி ரேலியா, தென்னாப்பிரிக்கா, கத் தார், ரஷ்யா, அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பலதுறை சார்ந்த தமிழ் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: