Sunday 30 October 2011

யானை விலைக்கு சினிமா டிக்கெட்: தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோயம்புத்தூரில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இளையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப் பட்டார். கோவை இடையர்பாளையத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஏழாம் அறிவு’ படம் திரையிடப்பட்டுள்ளது. வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியர் ரமேஷ், 26, தமது நண் பர்கள் நான்கு பேருடன் அந்தத் திரையரங்குக்குச் சென்றார். டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதாகக் கூறி ரமேஷும், அவருடைய நண்பர் களும் தகராறு செய்ததால் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரமேஷ், தமது டிக்கெட்டுகளை கிழித்து எறிந்துவிட்டு திரையரங் கை விட்டு வெளியே சென்றார். அப்போது ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கூரிய ஆயுதங்களால் ரமேஷையும் அவருடைய நண்பர் களையும் தாக்கியதால், தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இக்கொலை குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து திரையரங்கு உரிமையாளரின் உறவினர் உட்பட ஐவரைக் கைது செய்தனர்.

0 comments: