Tuesday 29 November 2011

7 மணி நேரம் விமானத்தில் நின்றபடியே பயணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நியூயார்க்: விமானத்தில் ஒருவர் 7 அல்லது 8 மணி நேரம் பயணம் செய்வதே சிரமம். அதிலும் ஒருவர் 7 மணி நேரம்
நின்றபடியே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயணத்தின்போது அவர் எவ்வாறு சிரமப்பட்டார் என்பதை அவரே விவரித்துள்ளார். அமெரிக்கரான 57 வயது பெர்கோவிட்ஸ் கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். ஆங்ரோச்சியிலிருந்து பிலடெல்பியாவுக்குச் செல்லும் விமானம் அது. பெர்கோவிட்ஸ் இருக்கையில் அமர்ந்தபோது அவரது பக்கத்து இருக்கை காலியாக இருந்திருக்கிறது. கடைசியாக வந்து அந்த இருக்கையில் அமர்ந்த ஒரு குண்டு மனிதர் பெர்கோவிட்ஸ் இருக்கையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டாராம். இதனால் அந்த இருக்கையில் தன்னால் அமர முடியவில்லை என்றும் இதனை விமானச் சிப்பந்திகளும் பொருட்படுத்த வில்லை என்றும் பெர்கோவிட்ஸ் கூறினார். அந்த 7 மணி நேரமும் அவர் நின்றுகொண்டே பயணம் செய்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக அந்த விமான நிறுவனம் கொடுத்த 200 டாலர் பற்றுச்சீட்டை அவர் வாங்க மறுத்து விட்டாராம்.

0 comments: