Wednesday 9 November 2011

மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அரசின்
உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் துறையின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பஞ்சாயத்தில் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் கவனிப்பார்கள்.

மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்கள். அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அரசு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள், பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் ஆகியோர் அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மக்கள் நலப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சியின்போது நியமிக்கப்படுவார்கள்.

பின்னர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களது பணி கலைக்கப்பட்டு விடும். ஏற்கனவே 2 முறை அவ்வாறு அந்தப் பணிகள் கலைக்கப்பட்டன. இப்போது, 3வது முறையாக அப்பணிகள் கலைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரன் கூறுகையில், அரசின் உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவைக் கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

0 comments: