Monday 7 November 2011

இன்று பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முஸ்லீம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் வயது வித்தியாசம் பாராமல் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். சென்னையில் திருவல்லிக்கேணி பள்ளி வாசல், பெரிய மேடு பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதே போல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்போ பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை சார்பில் நடந்த சிறப்பு தொழுகையை மவுலானா முகமது உமர் சிராஜீத்தீன் ஹஸ்ரத் நடத்தினார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகள் மாமிசம் உண்டு மகிழ வேண்டும் என கருதி இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். அவர்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்கினர். இதே போல், சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஒட்டகங்களும் குர்பானி கொடுக்கப்பட்டது.

0 comments: