Monday 24 October 2011

கண்ணீர் வடித்தார் எடியூரப்பா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூர் மெட்ரோ ரயில்
திட்ட துவக்க விழாவை டி.வி. யில் பார்த்து கண்ணீர் வடித்தார். கர்நாடகத்தில் கடந்த 2008ம் ஆண்டு மத்தியில் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பி. எஸ். எடியூரப்பா, கார்டன் சிட்டி என்றும் தகவல் தொழில் நுட்ப நகர் என்றும் அழைக்கப்படும் பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
ஆனால் நில மோசடி வழக்கில் சிக் கிய எடியூரப்பா தனது முதல்வர் பதவியை 3 ஆண்டுகளுக்கு பிறகு இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தனது இரு மகன்கள், மருமகன் ஆகியோருக்கு அரசு நிலத்தை விற்பனை செய்ததில் அவர் ஊழல் செய்ததாக அவர் மீது லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் தற்போது பெங்களூர் மத்திய சிலையில் அடைக்கப்பட்டுள் ளார். கடந்த வியாழன் பெங் களூர் மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழா பெங்களூரில் நடைபெற்றது.
அதன் நேரடிக் காட்சிகள் டி.வி. யில் காண்பிக்கப் பட்டன. அந்த காட்சிகளை எடியூரப்பா சிறையில் உள்ள தனது அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
தான் மிகவும் நேசித்த தனது திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 3200 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை அவ்வப்போது நேரில் பார்வையிட்டு நிறைவேற்றிய அந்த மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் நிகழ்ச்சியில் தான் இல்லையே என்று மனம் நொந்து அவர் அந்த காட்சிகளை பார்த்தபடியே கண்ணீர் விட்டு கண் கலங்கினார்.

0 comments: