Monday 24 October 2011

சவூதி இளவரசர் மறைவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அkஸ் கடந்த சனிக்கிழமை காலமானார்.

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்த இளவரசர் அkஸ¤க்கு வயது 86. கடந்த ஜூன் மாதம் முதல் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சவூது அரேபிய அரசவை தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இவரது மறைவைத் தொடர்ந்து 78 வயதாகும் இவரது இளைய சகோதரர் நயப முடிக்குரிய இளவரசராகிறார். இளவரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சவூதி தொலைக்காட்சிகளில் குரான் ஓதப்படும் காட்சி ஒளிபரப்பானது.
நாளைய தினம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் இறுதிச் சடங்கு நடைபெறுமென அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 87 வயதாகும் சவூதி அரசர் அப்துல்லா, ரியாதில் உள்ள மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments: