Monday 24 October 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கு கைதிகள் பிணை கேட்கலாம்: சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி இருப்பவர்கள் இப்போது பிணை யில் வெளிவருவதற்கான விண் ணப்பத்திற்கு தடை இருக்காது என இந்திய சட்டஅமைச்சர் சல் மான் குர்ஷித் கூறியுள்ளார். கனிமொழி, ராசா, சரத்குமார் உள்ளிட்ட 17 பேர் மீது ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் குற்றச் சாட்டுகளுக்கு தக்க ஆதாரம் இருப்பதாக மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. எனவே இனி அவர்கள் பிணை கேட்பதற்கு தடை இருக் காது என்று இந்திய சட்ட அமைச் சர் தெரிவித்தார். ஆனால் அவர் கள் மீதான குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். இதுபற்றி கருத்துக்கூறிய திரு சல்மான் குர்ஷித், “குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. இனி குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணை மனுக்களை நீதி மன்றம் விசாரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. விரைவில் அவர்கள் மனுக்கள் மீது நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடும் என்று அவர் கூறினார். எனவே அவர்களுக்கு பிணை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறப்படு கிறது. இருந்தாலும் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கின்படி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கக்கூடும் என்று சொல்லப் படுகிறது. அந்த வழக்கு நவம்பர் 11ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. அதேவேளையில் பிணை விசா ரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன் சிங் ஆகியோரை சந்தித் துப் பேசினார். கனிமொழி சிறை யில் அடைக்கப்பட்ட பின் இப் போதுதான் முதன்முறையாக அவர் களைச் சந்தித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு இரு முறை புதுடெல்லிக்குச் சென்றும் அவர்களைச் சந்திப்பதை அவர் தவிர்த்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாண்டு நிறைவு விழா நடைபெற்றபோது, புதுடெல்லியில் இருந்த போதும் கருணாநிதி பங்கேற்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் தோல்விக் குப் பிறகு சோனியாவுடனான இந் தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந் ததாக கருதப்படுகிறது. பிரதமருட னான சந்திப்பின்போது கூடங் குளம் அணுமின் நிலையத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் அங்கு வசிக்கும் மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப் படுகிறது.

0 comments: