Saturday 8 October 2011

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் காசு இல்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள்
, பிரசாரம் முடிந்ததும் விருந்து சாப்பிட பணம் இல்லாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளரான காங்கிரசின் சைதை ரவி, தேர்தல் செலவுக் கான முதல் கட்ட பணம் தர வில்லை. வெறும் கதர் துண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற கட்சியினர் பிரசாரம் முடிந்ததும் பிரியாணி, மது என கொண்டாட்டமாய் இருக்கும்போது எங்களுக்கு தக்காளி சாதம் வாங்கக்கூட முடியவில்லை என காங்கிரஸ் வேட்பாளர்கள் புலம்புவதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளரான சைதை ரவி, தேர்தலுக்குச் செல வழிக்கச் சொந்தப் பணத்தைச் செலவு செய்ய அஞ்சுவதாகக் கூறியுள்ளார். தமிழகத்தில் எப்போதுமே கூட்டணி பிடித்து போட்டியிட்டு வந்ததால் தேர்தலில் செலவுகள் அதிகம் செய்யவில்லை. கூட் டணிக் கட்சி பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த முறை வேட்பாளர் களுக்குத் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் மேலிடம் தேர்தல் செலவுக்கான பணத் தைக் கொடுக்கட்டும், பிறகு ஆரம்பிக்கலாம் தேர்தல் பிரசாரம் என்று காத்திருக்கின்றனர் வேட் பாளர்கள். திராவிடக் கட்சி களுக்கு இணையாக செலவு செய்து கடும் போட்டி தரக்கூடிய வேட் பாளரைத் தேர்வு செய்யாமல், தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டம்மி வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர் என்ற சந்தேகமும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments: