Saturday 8 October 2011

சிறுமியின் சாதனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரிட்டனைச் சேர்ந்த டே ஸ்மித் என்ற 4 வயது சிறுமி தனது நீச்சல்
திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் மிக சிறிய வயதில் 2 ஆயிரம் மீற்றர் தூரத்தை நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை உலக கின்னஸ் சாதனையிலும் இடம்பிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்த சிறுமி மிகச் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனையாக உருவெடுப்பார் என எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறுமி டேவின் சாதனை அளவை வேறு யாரும் இந்த வயதில் நிகழ்த்தவில்லை. எனவே அவர் சாதனையாளராக அறிவிக்கப்படலாம் என்றும் கின்னஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த சிறுமியின் சாதனையை அவளது தந்தை ராப் தாயார் டிரசன் பெருமிதம் பொங்க மகளை பார்க்கிறார்கள். 4 வயதில் 600 மீற்றர் நீந்துவதே மிகப்பெரிய விடயமாக இருக்கும். ஆனால் தமது மகள் 2 ஆயிரம் மீற்றரை நீந்தி பெரிய சாதனை படைத்து இருக்கிறாள். என்று அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த சிறுமி நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: