Saturday 8 October 2011

ஸ்ரீலங்கா : ஜனாதிபதியின் கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நேர்மையான ஊழல்கள் அற்ற ஜனாதிபதித் தேர்தல், பாரா ளுமன்ற பொதுத்தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் இவை
அனைத்தையும் நிறைவேற்றும் ஒரு புதிய யுகம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தென்னிலங் கையில் இருந்து தோன்றிய உதய சூரியனாக அரசியல் வானில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே உதயமாகியது.
1977 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் மோசடிகளை செய்து அதிகாரத்தை கைப் பற்றிய தினம் முதல், இலங்கையில் 2005 ஆம் ஆண்டு ஜனாதி பதித் தேர்தல் நடைபெறும் வரை இடம்பெற்ற அனைத்து தேர் தல்களிலுமே சட்டவிரோதமாக ஊழல் மோசடிகள் நிறைந்த தேர்தல்களாகவே விளங்கின.
1977 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சி மோசடி செய்து கள்ள வாக்குகளை அளித்தும், குண்டர்களின் வன்முறை களை கட்டவிழ்த்துவிட்டும் நாட்டில் அராஜக நிலையை ஏற் படுத்தி அதன் மூலம் மக்களை அச்சுறுத்தி தேர்தல்களில் வெற் றியீட்டியதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்நாட்டில் மக்க ளுக்கு இருந்த ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும், மக்களுக்கு கொடுமைகளை இழைத்தும் அராஜக ஆட்சியை நடத்தியது.
இவ்விதம் கொடுங்கோல் ஆட்சியை நடத்திவந்த ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கக்கூடிய பலம்வாய்ந்த ஒரு அரசியல் தலைவர் இல்லாத காரணத்தினால் ஜே. ஆர். ஜயவர்தன, ஆர். பிரேம தாஸ ஆகிய இரு ஜனாதிபதிகளின் கீழ் 17 ஆண்டு காலம் ஐக் கிய தேசியக் கட்சியினால் அதிகாரத்தில் வீற்றிருக்கக்கூடியதாக இருந்தது.
அதையடுத்து தென்னிலங்கையில் தோன்றிய மக்கள் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ அன்றைய அரசாங்கங்களுக்கு எதிராக நட த்திய பாதையாத்திரை, ஜனகோஸா ஆகிய எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களினாலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் பற்றிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினாலும் ஐக் கிய தேசிய கட்சி அரசு வலுவிழந்து 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி கூட்டணியிடம் படுதோல்வியை எதிர்நோக்கியது.
அதற்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னை பதவிக்கு கொண்டுவருவதற்கு முன்னணியில் இருந்து உழைத்த திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை உரிய முறையில் மதித்து பொறுப்பான பதவிகளை கொடுப்பதற்கு பதிலாக அவரை ஓரங்கட்டி, முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்தார்.
ஆயினும், தன்னுடைய சுய முயற்சியினால் வலுவிழந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கீழ் மட்டத்தில் இருந்து பலப்படுத்தி தன்னுடைய அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி சந்திரிக்காவின் உதவியோ, அனுசரணையோ இன்றி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னை ஆதரிக்கும் மக் களின் பலத்தை வைத்து 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியில் அமர்ந்தார். அன்றில் இருந்து நாட்டில் சட்டமும் ஒழுங்கும் கொடிகட்டி பறக்க ஆரம் பித்தது. நாட்டிற்கு இருந்த ஒரே ஒரு பிரச்சினையாக இருந்த பயங்கரவாதத்தையும் 2009ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் துவம்சம் செய்து இலங்கையில் மீண்டும் அமைதியை யும், சமாதானத்தையும் நிலைபெற வைத்தார்.
இப்போது நாட்டில் அராஜகமற்ற, நேர்மையான தேர்தல்கள் நடத் தப்படுவதற்கு இன்றைய அரசாங்கம் வகை செய்துள்ளது. இப் படியான நல்ல சூழ்நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நேர் மையான தேர்தலை நடத்துவதற்கு மறைமுகமாக முட்டுக்கட்டை களை விதித்து தன்னுடைய குண்டர் படையையும் தில்லு முல் லுகளையும் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமெ ன்ற எண்ணத்துடன் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் மக்கள் ஆணை இன்றைய உள்ளூராட்சி மன்றத் தேர் தலில் அரசாங்கக் கட்சிக்கே கிடைக்குமென்று அரசியல் அவ தானிகள் ஏற்கனவே ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.
இன்றைய தேர்தலில் மக்கள் மிகவும் அவதானமாக தங்கள் வாக் குகளை அளிக்கவேண்டும். காலை 7 மணிக்கே வாக்குச் சாவடி க்கு தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவண த்தை எடுத்துச் சென்று வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மக்கள் காலதாமதப்படுத்தி வாக்குச் சாவடிகளுக்கு சென்றால் உங்கள் வாக்குகளை வேறு சிலர் பதிவு செய்வதற்கான வாய்ப் புகள் ஏற்படுவதற்கு இடமுண்டு.
தொடர்ந்தும் எங்கள் நாட்டில் அராஜகமற்ற சட்டப்பூர்வமான நல் லாட்சி நடைபெற வேண்டுமாயின் மக்கள் சிந்தித்து தங்கள் வாக் குகளை அளித்து ஜனாதிபதி அவர்களின் கரங்களை மேலும் பலப்படுத்துவது அவசியமாகும்.

0 comments: