Monday 24 October 2011

கடாபியை சுட்டுக் கொன்ற வாலிபர் பரபரப்பு பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

லிபிய முன்னாள் தலைவர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 20 ம் திகதி அவரது சொந்த ஊரான சிர்த்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது.

லிபிய முன்னாள் தலைவர் கடாபியை சுட்டுக் கொன்றது நான் தான் என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இணையதளத்தில் புதிய வீடியோவையும் வெளி யிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் இராணுவ உடையில் இருக் கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டு கின்றனர்.
கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2 வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பேட்டியின் போது, கடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன் ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால் கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார் என்று சனாத் கூறியுள்ளார்.

0 comments: