Saturday, 22 October 2011

லிபிய தலைவரின் மறைவு மனித சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அணிசேரா நாடுகளின் அமைப்பின் பலம்வாய்ந்த அடித்தளமாக விளங்கிய லிபியாவின் தலைவர் கேணல் முஅம்மர் கடாபி நேற்றுமுன்தினம் கொல்லப்பட்டார். சதாம் சர்வாதிகாரப் போக்கில் ஈராக்கில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் என்றும், அவரிடம் உலகை அழிக்கவல்ல இரசாயண ஆயுதங்கள் இருந்தன என்றும் போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சதாம் உசைனின் அரசாங்கத்தை பதவியிறக்கிய சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் இறுதியில் அந்த மனிதனை தூக்கிலுமிட்டு தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டனர். அதேபோன்று கடாபியை அழித்தால் தங்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தோன்றிவரும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்திய வாதசக்திகள் லிபியாவிலும் தலையிட்டு எவருக்கும் அச்சமின்றி இருந்துவந்த கேணல் கடாபியையும் இறுதியில் தங்கள் மோசடி வலையில் வீழ்த்தி அவரின் உயிரைப் பறித்துவிட்டனர்.
எண்ணெய்வளம் மிக்க லிபியாவை சவுதி அரேபியாவைப் போன்று தங்களால் ஆட்டிவைக்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தினால் தான் ஏகாதிபத்தியவாத சக்திகள், லிபியாவில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி சிவில் யுத்தம் என்ற பேரில் தங்கள் கூலிப்படைகளை அனுப்பி இறுதியில் கேணல் கடாபியை துவசம் செய்துவிட்டார்கள்.
சதாம் உசைன் ஈராக்கில் மரண மடைந்து சில வருடங்களாகிய பின் னரும் அங்கு உள்நாட்டுக் கலவரங் களும், குண்டுவெடிப்புக்களின் மூலம் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றது. சதாம் உசைனை பதவியிறக்கி நாட்டை விடுவித்துவிட்டோம் என்று ஆடம்பரமாக கூறிக்கொள்ளும் ஏகாதிபத்தியவாத சக்திகளினால் ஈராக்கில் இன்றும் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்தமுடியா திருக்கிறது. இதிலிருந்து அரபுநாடுகளை அழித்து, எண்ணெய் வளத்தை தங்களின் கைப்பொம்மைகளின் மூலம் சூறையாடுவதே ஏகாதிபத்தி யவாத சக்திகளின் குறிக்கோளாகும்.
இன்று கடாபி மறைந்துவிட்டார். அடுத்தடுத்து ஏனைய இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளில் இவ்விதம் அரசாங்கங்களைக் கவிழ்த்து தங்கள் அடியாட்களை அதிகாரபீடத்தில் அமர்த்தும் முயற்சிகளில் ஏகாதி பத்தியவாத சக்திகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
லிபியத் தலைவர் கேணல் கடாபி, இலங்கை போன்ற சிறியநாடுகளினதும், வறுமை நிலையிலுள்ள நாடுகளினதும் நண்பனாக விளங்கினார். அவர் இந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலும், நீண்டகாலக் கடன் அடிப்படையிலும் மசகு எண்ணெய்யை வேண்டியளவுக்கு விற்பனை செய்தும் உதவியளித்தும் இருக்கிறார். 1976ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட லிபியத் தலைவர் கடாபி, அந்த உச்சிமாநாடு மகத்தான வெற்றியீட்டுவதற்கு அன்றைய யூகோஸ்லேவியாவின் தலைவர் மார்ஷல் ரிட்டோவுடன் இணைந்து அம்மாநாட்டை நடத்துவதற்கான நிதியுதவியையும் தாராளமாக வழங்கினார். லிபியத் தலைவர் கடாபியின் மறைவு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இன்றி சுதந்திரமாக இருக்கவிரும்பும் லிபியா போன்ற மற்ற நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது.
லிபியா முன்னாள் அதிபர் கடாபி, அவரது சொந்த ஊரில் ஒரு பதுங்கு குழிக்குள் பதுங்கி இருந்தார். அந்த நகரை புரட்சிப்படை நேற்றுக் கைப்பற்றியது. அப்போது அவரை புரட்சிப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
42 ஆண்டுகளாக அதிபர்
69, வயதான முகம்மது கடாபி ஆபிரிக்காவில் உள்ள லிபிய நாட்டின் அதிபராகக் கடந்த 42 ஆண்டுகளாக இருந்தார். அவர் பதவி விலகக் கோரி அவருக்கு புரட்சி ஏற்பட்டது.
புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் களத்தில் குதித்தன.
இந்த நாடுகள் விமானத் தாக்குதல் நடத்தி புரட்சிப்படை வெற்றிபெற உதவின. இந்த நிலையில் இராணுவத்தில் இருந்த தளபதிகளும், வீரர்களும் கூட கடாபிக்கு எதிராகத்திரும்பினார்கள்.
முதலில் புரட்சிப்படை பெங்காசி நகரைக் கைப்பற்றியது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் படை முன்னேறியது. கடைசியில் கடாபி இருந்த தலைநகர் திரிபொலியையும் புரட்சிப்படை படித்தது.
இதைத் தொடர்ந்து கடாபி தலைமறைவானார். அவர் இதுநாள் வரை வசித்த வந்த வீட்டை புரட்சிப்படை கைப்பற்றியது. அதை புரட்சிப்படை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது.
சொந்த ஊரில் நடந்த சண்டை. கடைசியாக கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டே, பாணி வாலித் ஆகிய 2 இடங்கள் மட்டும் புரட்சிப்படையிடம் பிடிபடாமல் இருந்தன. அந்த 2 இடங்களையும் பிடிப்பதற்காக புரட்சிப்படை அந்த இடங்களுக்குள் புகுந்தன. முதலில் பானி வாலித் பிடிபட்டது. அதன்பிறகு நேற்று சில மணிநேர சண்டைக்குப் பிறகு சிர்ட்டே பிடிபட்டது.
சிர்ட்டேயில் நடந்த சண்டை சில மணி நேரங்களுக்கு நீடித்தது. அதன்பிறகு அது புரட்சிப்படையிடம் விழுந்தது. இந்த சண்டையின் போது கடாபியின் மந்திரி சபையில் இராணுவ மந்திரியாக இருந்த அபுபக்கர் யூனிஸ் இறந்தார். பின்னர் புரட்சிப்படை அந்த நகரை சுற்றி வந்த போது ஒரு பதுங்கு குழியில் கடாபி பதுங்கி இருந்ததை கண்டறிந்து சுட்டுக்கொன்றனர்.
2 கால்களிலும் காயத்துடன் பதுங்கு குழிக்குள் இருந்த அவரை பார்த்ததும் புரட்சிப்படை வீரர்கள் துப்பாக்கியை அவரை நோக்கிப் பிடித்தனர். பதறிப்போன கடாபி, "என்னை சுட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சினார். அது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை ஆகும்.
அவர் கோரிக்கையை ஏற்காமல் புரட்சிப்படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அவரது உடல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடாபியின் உடல் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அதுபற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்றும் புரட்சிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, புரட்சிப்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த கடாபியை வாகனத்தில் அங்கிருந்து வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றதாகவும், வழியில் அவரது உயிர் பிரிந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
கொண்டாட்டம்
சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் புகைப்படங்களையும் புரட்சிப்படையினர் வெளியிட்டனர். அவர் கொல்லப்பட்டதை புரட்சிப்படையினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
கடாபியின் மகன்களில் 2 பேர் ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் பலியானார்கள். ஒருவர் திரிபொலி நகரில் உள்ள தன் வீட்டில் தங்கி இருந்த போது அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகினார். நேற்று நடந்த சண்டையின் போது சிர்ட்டே நகரில் கடாபியின் மகன்களில் ஒருவரான முட்டாசி பிடிபட்டதாக புரட்சிப்படை அதிகாரி தெரி வித்தார். கடாபியின் இன்னொரு மகன் சமீபத்தில் நைஜர் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
கடாபி வாழ்க்கை குறிப்பு
கடாபி 1942ம் ஆண்டு ஜூன் மாதம் 7ந் திகதி பிறந்தார். அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது 1969ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளரை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு அவர் 2011ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். மன்னராக இல்லாமல் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த 4வது அதிபர் ஆவார்.
இவருடைய தாத்தா இத்தாலி நாடு லிபியாவை கைப்பற்றிய போது அதை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் பங்கு கொண்டவர். அந்த கிளர்ச்சியில் அவர் உயிர்த்தியாகம் செய்தவர். இது நடந்தது. 1911ம் ஆண்டு ஆகும். கடாபி 1961ம் ஆண்டு இராணுவ அகாடமியில் சேர்ந்தார். 1966ம் ஆண்டு பட்டம் பெற்றார். அதன்பிறகு ஐரோப்பாவில் மேற்பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதிகாரியாக இராணுவத்தில் சேர்ந்தார்.
அப்போது மன்னர் இத்ரிஸ் ஆட்சி நடந்தது. மன்னர் சிகிச்சைக்காக துருக்கி நாட்டுக்கு சென்று இருந்த போது அவருக்கு எதிராக கடாபி புரட்சி நடத்தினார். ரத்தம் சிந்தாமல் புரட்சியை நடத்தி அவர் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அது முதல் அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சியை நடத்தினார். அவர் 42 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
கடாபிக்கு 2 மனைவிகள். அவர்கள் மூலம் ஒரு மகளும் 7 மகன்களும் பிறந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து போய் விட்டனர். இப்போது கடாபி இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.
லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கர்ணல் முவம்மர் கடாபி தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல ரி!வி காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.
நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக் கோரிவருகிறது.
கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த இராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு, முன் 'என்னைக் சுடாதே' என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

0 comments: