Monday 24 October 2011

துருக்கி பூகம்பம் பயங்கரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கிழக்கு துருக்கியில் ஞாயிறன்று நடந்த பூகம்பத்தில் இடிந்து விழுந்த
அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளிலிருந்து அவசரப் பணியாளர்கள் ஐந்து பேரை உயிருடன் மீட்டிருக்கின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரால் , இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நிலையிலேயே, போலிசுக்கு போன் செய்ய முடிந்திருக்கிறது.
எர்கிஸ் மற்றும் வான் ஆகிய நகரங்களில் நடந்த இந்த பூகம்பத்தில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இன்னும் நூற்றுக்கணக்கானோரின் கதி என்னவென்று தெரியவில்லை.
பெரிய பளு தூக்கும் இயந்திரங்களும், மோப்ப நாய்களும் , உயிர் தப்பியவர்களை தேட பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
உதவி நிறுவனங்கள் கூடாரங்களையும், கள மருத்துவமனைகளையும், வீடிழந்தவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் சமையற்கூடங்களையும் அமைத்துள்ளன.

1 comments:

said...

idipadukalukkul sikiyiruppavarakalai kaapaarra arasu viraivil seyal pada venudm...