Tuesday 25 October 2011

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு கிடைத்த ரூ. 80 இலட்சத்துக்கு கணக்கு எங்கே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னா ஹசாரே போராட்டத்துக்கு மக்கள் வழங்கிய ரூ. 80 இலட்சம் நன்கொடையை அரவிந்த் கேஜ்ரிவால் தான்
நடத்தும் அறக்கட்டளையில் சேர்த்து விட்டார். அதன் கணக்கு விவரங்கள் எங்கே? என அன்னா குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுவாமி அக்னிவேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்னா குழு உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகுகின்றனர்.
தற்போது அவர்கள் மீது தொடர்ச்சியாக முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படு கின்றன. தனியார் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ரையாற்ற சென்ற கிரண்பேடி, விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்துவிட்டு பிசினஸ் வகுப்பு கட்டணத்தை வசூலித்தார் என குற்றம் சாட்டப்பட்டது. அறக்கட்ட ளையின் சேமிப்புக்காகத்தான் அவ்வாறு செய்தேன் என விளக்கமளித்தர் கிரண்பேடி.
அரவிந்த் கேஜ்ரிவால் வருமான வரித்துறையில் பணியாற்றிய போது மேல்படிப்புக்காக இரண்டு ஆண்டுகள் வெளிநாடு சென்றார். அதன்பின் அவர் பணிக்கு திரும்பவில்லை.
இதனால் வெளிநாட்டில் இருந்த காலத்தில் பெற்ற சம்பளத்தை வட்டியுடன் சேர்ந்து 9 இலட்சமாக இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கேஜ்ரிவால் மீது அன்னா குழுவுக்கு ஆதரவாக இருந்த சுவாமி அக்னிவேஷ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
அன்னா குழு போராட்டத்துக்காக மக்கள் ரூ. 80 இலட்சம் நன்கொடை வழங்கினர். அவற்றை கேஜ்ரிவால் தான் நடத்தும் பி.சி.ஆர்.எப். (பொதுநல ஆராய்ச்சி மையம்) என்ற அறக்கட்டளை கணக்கில் சேர்த்துவிட்டார். இந்த அறக்கட்டளையில் அன்னா குழுவைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இல்லை. நன்கொடை விவரங்களை அறக்கட்டளை வெப்சைட்டில் கடந்த 15 ஆம் திகதிக்குள் தெரிவிக்கும்படி கேஜ்ரிவாலிடம் அன்னா கூறினார்.
ஆனால் மக்கள் அளித்த நன்கொடை, செலவு கணக்குகளை கேஜ்ரிவால் இன்னும் தெரி விக்கவில்லை. இதை வெளிப் படையாக விரைவில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அக்னிவேஷ் கூறினார்.
அக்னிவேஷ் குற்றச்சாட்டு குறித்து அன்னா குழு உறுப்பினரும், கேஜ்ரிவாலின நண்பருமான மனீஷ் சிசோடியா கூறுகையில், "நன்கொடை கணக்கு விவரம் ஏற்கனவே பி.சி.ஆர்.எப். வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 6 மாதமாக சிறப்பு ஆடிட்டிங் நடந்து வருகிறது.
இம்மாத இறுதியில் நன்கொடை கணக்கு மற்றும் செலவு விபரங்கள் எல்லாம் வெப்சைட்டில் வெளியிடப்படும்.
சுவாமி அக்னிவேஷ் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர் கோபத்தில் ஏதோ கூறியிருக்கலாம்" என்றார்.
அன்னா குழு உறுப்பினர் கிரண் பேடி கூறுகையில், "அன்னா குழு உறுப் பினர்கள் ஒவ்வொருவரையும் களங்கப் படுத்த போராட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே முயற்சிகள் நடந்து வருகிறது. நாங்கள் தவறான வழியை பின்பற்றியிருந்தால் இதே லோக்பால் சட்டமே எங்களை தண்டிக்க முடியும். குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்" என்றார்.

0 comments: