Tuesday 25 October 2011

சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
னாவும், குஜராத்தும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் இணையப் போவதையடுத்து மோடி சீனா செல்கிறார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நவம்பர் மாதத்தில் சீனா செல்ல உள்ளார். இதற்கான பயணவிபரம் குறித்து சீன அமைச்சர் அல் பிங், மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச பொருளாதாரத்தை விரைவில் எட்டும் வகையில் குஜராத் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
மேலும் சீனாவும், குஜராத்தும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதையடுத்து நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: