Wednesday 26 October 2011

தீபாவளித் திருநாள் தீபம் ஏற்றும் பெருநாள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மகிழ்ச்சி பொங்கும் திருநாள்! பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாடப்படும் பெருநாள்!

தீபாவளியைப் போல எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும் திருநாள் வேறெதுவும் கிடையாது. அவ்வளவு தூரம் தீபாவளி மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்று விட்ட ஒரு நன்நாளாகும்!
தீபாவளி யானது மனித சுதந்திரத்தின் மதிப்பைக் காட்டுகின்றது. தாயின் கருணையையும் பெருமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது!
முக்கியமாக நரகாசுரன் என்ற கொடியவன் அரக்கர்களுக்கு அரசனாக இருந்தான். தான் பெற்ற வரபலத்தால் தேவர்களையும் மானிடர்களையும் பெரிதும் வருத்தினான். அவனைத் தட்டிக் கேட்க எவருமே இல்லை!
இதனால் அவனுடைய அட்டகாசம் அதிகரித்தது. செய்வதறியாத தேவரும் மானிடரும் காக்கும் கடவுளான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர்.
கிருஷ்ண பரமாத்மாவும் அவர்க ளுடைய துயர் நீக்கக் கருதி நரகாசுரனுடன் போர்புரிந்தார். ஆயினும் அவரால் அவனை வெல்ல முடியவில்லை. மூர்ச்சித்து விழுந்தான்.
தேவி சத்தியபாமை கையிலே ஆயுதத்தை ஏந்தினாள் அசுரனை அழிந்தான்!
இது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், ஆயினும் ஒருவன் இறந்த தினத்தை இப்படியா? மகிழ்ச்சியுடன் காலம் காலமாகக் கொண்டாடுவார்கள்? இது ஒரு கேள்வி! ஒரு பெண் பெற்ற பிள்ளையையே கொள்ளு வாளா?... இது இன்னொரு கேள்வி.
முதலாவதாக அண்மையிலே ஒரு சர்வாதிகாரி இறந்துவிட்டார். (கடாபி) அவர் இறந்ததைக் கேள்விபட்ட அந்த நாட்டு மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடும் காட்சியை நாம் தொலைக்காட்சியூடாகப் பார்க்க வில்லையா?
இது போலத்தான் அன்று நரகாசுரன் என்ற கொடியவன் மனித சுதந்திரத்துக்கே பெறும் முட்டுக் கட்டையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்திருக்கின்றான் ஆகவே அவன் இந்தத் தினத்தை அன்றைய மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடியது இன்றும் தொடர்கதையாக இருப்பது நியாயமானதும் சரியானதும் ஆகும். ஆகவே தீபாவளி தொன்று தொட்டுத் தொடர்கின்றது.
அடுத்து பூமாதேவிக்கும் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கும் பிறந்த குழந்தையே நரகாசுரன்.
பூமாதேவியே சத்திய பாமையாகவும் பிறந்தார். தாயே பெற்ற பிள்ளையைக் கொள்ளுவாளா? இது சிந்திக்க வேண்டிய விடயம்! ஆயினும் வரம் பெற்ற நரகாசுரன் தன்னைத் தன் தாயைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்றிருந்தான்.
ஆகவே பூமாதேவியே தேவிசத்திய பாமையாகக் பிறந்து நரகாசுரனை அழித்தாள். அத்துடன் உலகத்து உயிர்களையும் காத்தருளினாள்.
கருணையே உருவமானவள் எந்த தீது புரியினும் பிள்ளையை வெறுக்க மாட்டாள் என்று நம்பியே நரகாசுரனும் மேற்படி வரத்தைப் பெற்றான் ஆயினும் தன் தாய் என்பவள் பிள்ளைக்கு மட்டும் தாய் அல்ல, உலக உயிர்களுக்கெல்லாம் அவளே மாதா என்பதை அரக்கன் மறந்துவிட்டான், ஆகவே உலக உயிர்களின் நன்மை கருதி தான் பெற்ற மகனையே தாயே அழித்தாள் ஆகவே உலக உயிர்களின் நன்மை¨யும் சுதந்திரத்யைதயும் பாதுகாத்த தினமும் தீபாவளி என்பது பொருந்தும்.
ஆகவே இந்த நல்ல நாளிலே இதை வெறும் களியாட்ட நாளாகக் கருதாமல் அர்த்த புஷ்டியுடன் கொண்டாட வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் தீபாவளியின் உண்மையான நோக்கம் உலகத்துக்கே புரியும்.

0 comments: