Tuesday 25 October 2011

அமைச்சர் கருப்பசாமி உடல் அடக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் நடைபெற்றது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் கருப்பசாமி நேற்று முன்தினம் மதியம் காலமானார். இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கருப்பசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்த அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல்; கூறியவர் உங்களுக்கு எது வேண்டுமானலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். உங்கள் குடும்பத்திற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் என் கடமை அது என்று கண் கலங்கியபடி கூறினார். முதலமைச்சர் உடன் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு, சின்னய்யா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து அமைச்சர்களும் இறுதி சடங்கில் பங்கேற்க முதலமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு உடல் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு சொந்த ஊரான புளியம்பட்டி கிராமத்தை அடைந்த கருப்பசாமியின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக அங்குள்ள அரங்கத்தில் வைக்கப்பட்டது. காலை முதலே சங்கரன்கோவில் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் சாரை சாரையாக அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் இருந்தனர். சங்கரன்கோவில் நகரின் அனைத்து கடைகளும் அஞ்சல் செலுத்தும் வண்ணமாக அடைக்கப்பட்டிருந்தன. புளியம்பட்டி ஊரில் உள்ள அனைத்து மக்களும் நேற்று முன்தினம் இரவு முதலே சாப்பிடாமல் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். ஊரின் மக்களின் கண்ணீர் போல காலை 6.30 மணி முதல் வானமும் கண்ணீர் விட்டு அழுதது. மழை கொட்ட தொடங்கியது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மழை பெய்யாவிட்டாலும் சங்;கரன்கோவில் பகுதியில் மட்டும் கொட்டிய மழை மதியம் 2.30 மணி வரை அவரை அடக்கம் செய்யும் நேரத்திற்கு மட்டும் இடைவெளி விட்டதை போல நின்றது. ஏற்கனவே அடக்கத்திற்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர செயலாளர் கண்ணன், மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் விஜேயேந்திர பிதரி, துணை கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் செய்து வந்தனர். சங்கரன்கோவில் ராஜபாயையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள அமைச்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. முதல்வர் உத்தரவை ஏற்று நேற்று காலை முதலே சங்கரன்கோவிலில் அமைச்சர்கள் குவியத்தொடங்கினர். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர். ராஜ்யசபா உறுப்பினர் தங்கவேலு தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3.15 தொடங்கிய உடல் அடக்க ஏற்பாடுகள் 4.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், உதயகுமார்,கோகுல இந்திரா, செந்துார் பாண்டியன், செல்லப்பாண்டியன், சண்முகநாதன், விஸ்வநாதன், சண்முகவேலு, முனுசாமி, அக்ரி கிருடி;ணமூர்த்தி, வைத்தியலிங்கம், பழனியப்பன், சண்முகம், செல்லுார் ராஜு, பச்சமால், பழனிச்சாமி, ராமலிங்கம், வேலுமணி, சின்னையா, சம்பத், தங்கமணி, செந்தமிழன், செல்விராமஜெயம், ராமண்ணா, சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, ஜெயபால், புத்திசந்திரன், விஜய், சிவபதி, முகம்;மது ஜான் உள்ளிட்ட 32 அமைச்சர்கள் , முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், டாக்டர் துரையப்பா, கோபால், பாலாஜி, வைகை செல்வன், முத்துராமலிங்கம், பரஞ்சோதி உள்ளிட்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பசுபதி பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ், காவல் துறை துணைத்தலைவர் வரதராஜு, காவல்துறை கண்காணிப்பாளர் விஜேயேந்திர பிதரி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காவல் துறையின் இசைக்குழுவினர் பிரிவு இசையை இசைத்தனர். பின்னர் 96 குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டது. அரசு மரியாதை முடிந்தவுடன் அமைச்சரின் உடல் அவரின் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்சிகளில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொறுப்பாளர்கள் கந்தவேல், கணபதி, லட்சுமணன், நயினார், ரமேடி;, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி முத்துச்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ சங்கரலிங்கம்,வெங்கடேசன், நகர அம்மா பேரவை செயலாளர்  அப்துல் கனி, முருகன், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், முருகையா, செளந்தர், தங்கப்பாண்டி, ஆறுமுகம், சின்னராஜ், குமாரவேல், காளிராஜ், சுப்பையா, உமாமகேஸ்வரன்,மாரியம்மாள், மாரியப்பன், ஜெயலட்சுமி, ஆறுமுகப்பாண்டியன், சோடாகுழந்தைவேல், ஆப்பரேட்டர் மணி, வைரவன், மேசையா, அந்தோணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.                                          

0 comments: