Saturday 8 October 2011

அன்னா ஹசாரேக்கு பால் தாக்கரே எச்சரிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேவை இல்லாமல் மோதல் வேண்டாம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரேக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக டெல்லியில் கடந்த மார்ச், ஆகஸ்ட் மாதத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஆகஸ்ட் மாத உண்ணாவிரதத்துக்காக ராம் லீலா மைதானத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தினந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு 2 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தசரா பண்டிகை இறுதி நாளன்று சிவசேனா தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் நிறுவன தலைவர் பால்தாக்கரே பேசினார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, சரத்பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவான் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம், ஐந்து நட்சத்திர உண்ணாவிரதம் என விமர்சித்தார். அன்னாவின் போராட்டம் ஊழலுக்கு எதிரான உண்மையான போராட்டமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அன்னா ஹசாரே, பால் தாக்கரேவுக்கு வயதாகிவிட்டது. அவருக்கு எது சரியோ அதை அவர் செய்யட்டும். நமக்கு எது சரியோ அதை நாம் செய்வோம் என்றார். பால் தாக்கரேவின் வயதை குறிப்பிட்டு அன்னா ஹசாரே பேசியது சிவசேனா மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவை இல்லாமல் எங்களுடன் மோத வேண்டாம். அன்னா தெரிவித்த கருத்துகளுக்கு தக்க பதிலடியை எங்களால் கொடுக்க முடியும். நாங்கள் காந்தியவாதிகள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

0 comments: