Tuesday 4 October 2011

தாவூத் இருக்குமிடம் தெரியும்: இந்தியா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியா தேடி வரும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்றும் அவர் இருக்குமிடம் தனக்குத் தெரியும் என்றும் இந்தியா பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது. அதேவேளையில் பக்கத்து நாடான இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துவதற் காக பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் வளர்த்து விடுகிறது என்றும் ஆனால் வளர்த்த கிடா மார்பில் பாயும் கதை யாக அதனால் பாகிஸ்தானுக்கே ஆபத்து காத்திருக்கிறது என்றும் அமெரிக்காவும் இஸ்லாமாபாத்தை எச்சரித்துள்ளது. உலகின் அதிபயங்கர பயங்கரவாத அமைப்பான அல்காய்தாவின் ஆட் சேர்ப்பு ஆசாமி என்று வர்ணிக்கப்பட்டு வந்த அன்வர் அல்-அவ்லாகியை அமெரிக்கா தீர்த்துக்கட்டிய வேளை யில் இந்த எச்சரிக்கைகள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வருபவர் தாவூத் இப்ராஹிம். குற்றவாளியான தாவூத்தை, 2003ஆம் ஆண்டு அனைத்துலகப் பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உள்துறை அமைச் சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “ஹக்கானி இயக்கம் உள்ளிட்ட பல பயங்கரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக இந்தியா தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறது. இதை தாமத மாகவே அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாகத் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறோம். “ஆனால் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும். ஒரு நாள் பாகிஸ்தானின் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டுவோம்,” என்று சிதம்பரம் சொன்னார். இதற்கிடையே, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஒரு விரிவுரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளைக் காஷ் மீரில் பாகிஸ்தான் வளர்த்துவிட்டு உள்ளது என்று ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டார். “கொடூரமான விலங்கை வளர்த்து வரலாம், அது பக்கத்து நாட்டுக்காரரை மட்டுமே தாக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. ஆனால் அப்படி நடக்காமல் போன சம்பவங்கள் ஏராளம்,” என்று ஹில்லரி எச்சரித்தார். இதுபற்றி பாகிஸ்தானுடன் தாங் கள் பேசி, பயங்கரவாதிகள் பாகிஸ் தான் மண்ணில் செயல்படுவது எந்த வழியிலும் அந்த நாட்டுக்குப் பலன் தராது என்பதை இஸ்லாமாபாத்துக் குத் தாங்கள் உணர்த்தி வருவதாகவும் ஹில்லரி குறிப்பிட்டார். இதற்குப் பாகிஸ்தான் செவிசாய்ப்பதாகவும் அமெரிக்க அமைச்சர் சொன்னார்.

0 comments: