Sunday 16 October 2011

ஹஜ் புனித பயணம் சென்ற 19 யாத்திரிகர்கள் இறப்பு : இந்திய தூதரகம் தகவல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
துடெல்லி: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் ஏராளமான யாத்திரிகர்கள் செல்கின்றனர். இந்தாண்டு இதுவரை 61 ஆயிரத்து 847 பேர், 223 விமானங்கள் மூலம் சவுதி அரேபியா சென்றுள்ளனர். மெக்காவில் 27 ஆயிரத்து 487 பேரும், மெதினாவில் 34 ஆயிரத்து 345 பேரும் தங்கி உள்ளனர். இந்திய யாத்திரிகர்களில், இதுவரை 19 பேர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துள்ளனர். இவர்களில் 15 பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்கள், மீதமுள்ள 4 பேர் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் சென்றவர்கள்.
டெல்லியில் இருந்துதான் அதிகம் பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். 20 ஆயிரத்து 268 பேர் சென்றுள்ளனர். அடுத்தபடியாக லக்னோ (10,128), ஐதராபாத் (6,977) மற்றும் கோழிக்கோடு (8,400) ஆகிய நகரங்களில் இருந்து யாத்திரிகர்கள் சென்றுள்ளனர். இந்த தகவல்களை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

0 comments: