Tuesday 18 October 2011

அதிமுகவுக்கு முதல் முக்கிய சோதனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக பொதுத்தேர்தலில் எதிர் பாராதவிதமாக அமோக வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அமைத்த

ëஜயலலிதாவின் அதிமுக கட்சி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவு அதிமுகவுக்கு முதல் சோதனை ஆகும். இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தவிர 16 சுசேயட்சைகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். சென்ற செவ்வாய்க்கிழமை அன்று இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது. இதில் காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக கட்சிகள் போட்டியிடாததால் ஆளும் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் பரஞ்சோதியும் திமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என் நேருவும் போட்டியிடுகின்றனர். பரஞ்சோதியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ëஜயலலிதா கடந்த 9ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதிமுகவைச் சேர்ந்த அமைச் சர்கள் கடந்த ஒரு மாதமாகவே திருச்சியில் முகாமிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேரு, நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேருவுக்கு ஆதரவாக ஸ்டாலின் திருச்சியிலேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்துக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியும் நேருவுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசினார். பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட நேரு ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அன்று மாலை யுடன் பிரச்சாரமும் ஓய்ந்தது. ஆளும் அதிமுகவைப் பொறுத்தவரை இந்த இடைத் தேர்தல் முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. திமுகவைச் சேர்ந்த பலர் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு அதிகரிக்குமா? அல்லது சரியுமா? என்பதை இந்தத் தேர்தல் எதி ரொலிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகள் அணி மாறி இருப்பதால் அதன் விளைவுகளும் திருச்சி இடைத்தேர்தல் முடிவுகள் காட்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவுக்கு 240 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு சாவடிகளும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் 600 பேர் உள்பட மொத்தம் 3,000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 2,08,247 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வரும் 20ம் தேதி நடைபெறும். கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை விபத்தில் மரண மடைந்ததால் இங்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

0 comments: