Sunday 9 October 2011

அம்மன் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகை கொள்ளை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவிலில் அர்ச்சனை செய்த பூசாரி தட்டில் ரூ.500 தட்சணை போட்டு அம்மன் கழுத்தில் கிடந்த 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த தந்தை - மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லாவரத்தில் பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டு பழமையான இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடப்பது வழக்கமாம்.
செந்தாமரை (வயது 70) என்பவர் 30 வருட மாக இங்கு பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று காலை வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவி லில் வழக்கம் போல் கூட்டம் கூடி இருந்தது. காலை 7.30 மணிக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நாகரிக உடை அணிந்த 16 வயது இளம்பெண்ணும், நாட்டாமை பாணியில் பணக்காரர் போல பந்தா காட்டியவாறு சுமார் 55 வயது நபரும் கோவிலுக்கு வந்தனர்.
அந்த நபர் இளம் பெண்ணை காட்டி, ``இவள் என் மகள்; இவளுக்கு பிறந்தநாள் சிறப்புபூஜை செய்ய வேண்டும்'' என்றார். உடனே பூசாரியும் சிறப்பு பூஜை செய்து கற்பூரத் தட்டை அவருக்கு காட் டினார்.
அந்த நபரும் இளம் பெண்ணும் பயபக்தியு டன் சாமி கும்பிட்டு விட்டு பூசாரி காட்டிய அர்ச்சனை தட்டில் புத் தம்புதிய 500 ரூபாய் நோட்டை போட்டார் கள். அர்ச்சனை தட்டில் ரூ.500 விழுந்ததும் இன்ப அதிர்ச்சியடைந்த பூசாரி வள்ளல் போல வந்த நபரிடம் தனிமரியாதை கொடுத்து பேசினார்.
அப்போது அந்த ஆசாமி, ``என் மகள் பெயரில் குடும்பத்தோடு சிறப்பு பூஜை செய்ய வேண்டும்; என்றைக்கு வரலாம்'' என்றவாறு நைசாக பேச்சுக்கொடுத்து பூசாரியை கோவில் வராண்டா அருகில் அழைத்து வந்தார்.
இளம்பெண் மட்டும் கண்ணை மூடியவாறே பக்தி பரவசமாய் அம் மன் சிலை அருகில் நின்று சாமி கும்பிட்டார். உடனே பூசாரி, ``புரட்டாசி மாதம் இன்றும் நாளையும் கூட் டமாக இருக்கும். அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள் சிறப்பாக பூஜை நடத்தி விடலாம்'' என்றார்.
``ரொம்ப நன்றிங்க சாமி; உங்க ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்கு இருக்கணும்'' என்று கூறி விட்டு சாமி கும்பிட்டு இருந்த பெண்ணிடம், ``வாம்மா அடுத்த வாரம் அம்மாவையும் அழைச் சிட்டு வந்து இன்னும் அதிக நேரம் சாமி கும் பிடலாம்'' என கூறி பய பக்தியாக கும்பிட்டப டியே கோவிலில் இருந்து அந்த நபர் வெளியேறி னார்.
பின்னர் கோவிலுக் குள் சென்ற பூசாரிக்கு, அம்மன் கழுத்தில் போட் டிருந்த தங்ககாசு மாலை, தங்கச் சங்கிலி போன்ற சுமார் 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட் டதை கண்டு அதிர்ச்சி யில் உறைந்து போனார். வெளியில் வந்து பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் தந்தையும், மக ளும் மாயமாகி விட்டனர்.
இதுகுறித்து பல்லாவ ரம் காவல் நிலையத்தில் பூசாரி புகார் செய்தார். பூசாரியை கோவில் வராண் டாவிற்கு அழைத்து பேச்சுகொடுத்த நேரத் தில் அவருடன் வந்த இளம் பெண் அம்மன் நகை களை சுருட்டியது காவலர் கள் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக தந்தை-மகள் போல நடித்து நகையுடன் தலை மறைவான திருட்டு கும் பலை போலீசார் தேடி வருகின்றனர்.

0 comments: