Sunday 25 September 2011

லெட்சுமணன் கோட்டைத் தாண்டலாம்! நீதிபதிகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லெட்சுமணன் கோட்டை சீதை தாண்டவில்லை என்றால் ராவண வதம் நடந்திருக்காது. எனவே லெட்சுமணன் கோட்டை தாண்டலாம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  2 ஜி அலைக்கற்றை வழக்கில் ப. சிதம்பரத்தை பிரதியாக்க வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி சுப்ரீம் கோர்ட்டில் அளித்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் நடைபெற்றது. இந்த வழக்கில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சுவாமியின் மனுவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதிட்டார். நீதிமன்றத்தில் ராவ் கூறியதாவது,  இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே வழக்கு குறித்த சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வை முடிவுக்கு வந்து விட்டது. அதன்பிறகு சட்ட நடவடிக்கைகள் வழக்கமான முறையில் நடைபெறும். சுவாமி அவருடைய மனுவை 2 ஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்தான் அளிக்க வேண்டும். இப்போது சிதம்பரத்திற்கு எதிரான மனுவை ஏற்று உத்தரவிடுவது முறையானதாக இருக்காது. சுப்ரீம் கோர்ட் லெட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் கூறும் போது,
லெட்சுமணன் கோடு பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் லெட்சுமணன் கோட்டை சீதை தாண்டவில்லை என்றால் ராவணின் வதம் நடந்திருக்காது. அக்கோடு தாண்டப்பட்டதால்தான் அரக்கர்கள் அழிக்கப்பட்டார்கள். லெட்சுமணன் கோடு அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. மக்கள்தான் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் ஏன் வழக்குகளை மேற்பார்வையிடுகிறது.
1996 ம் ஆண்டு வினீத்நாராயண் வழக்கு வரும் வரை சுப்ரீம் கோர்ட் வழக்குகளை மேற்பார்வையிடுவது என்பது கிடையாது. இப்போது ஏன் மேற்பார்வைக்கு அவசியம் வந்துள்ளது என்று நீதிபதிகள் அரசு வழக்கறிஞரை பார்த்து கேட்டனர். இதற்கு பதில் கூறிய ராவ், காலத்தின் தேவைக்கேற்றபடி சட்டம் பரிணாமம் பெற்றதன் விளைவு இது என்றார். ஊழல் மலிந்ததும் அது பற்றி சி.பி.ஐ ஒழுங்காக விசாரிக்காததும்தான் இதற்கு காரணம். பரவலான தீமை, சீர்கேடுதான் வழக்குகளை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையிட காரணம். இது போன்ற வழக்குகள் முன்பு இருக்கவில்லை என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

0 comments: