Wednesday 7 September 2011

திருச்சியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதின

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த மணப்பாறையருகே பயணிகள் பேருந்து இரண்டு நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 15 பேர் உயிழந் தனர். மோதிக்கொண்ட பயணிகள் பேருந்துகளில் ஒன்று உள்ளூர்ப் பயணிகள் பேருந்து, மற்றொன்று தனியார் பயணிகள் பேருந்து. இந்த விபத்தில் உள்ளூர் பேருந்தே அதிகம் பாதிப்புக்குள் ளாக்கியது. திருச்சியிலிருந்து மதுரைக் குச்செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் செல்லம்பட்டியிலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது உள்ளூர்ப் பயணிகள் பேருந்து. புதுச்சேரியிலிருந்து திருச்சி வழியாக திருவனந்தபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது தனியார் பேருந்து. இந்த இரு பேருந்துகளும் திருச்சி, மதுரை நெடுஞ்சாலையில் மின்னல்வேகத்தில் பறந்துகொண் டிருந்தன. பிற்பகல் 12.00 மணி யளவில் கோவில்பட்டி அருகே யுள்ள ஆவரம்பட்டி என்னும் ஊர் எல்லையில் சென்று கொண் டிருக்கும்போது ஒன்றுக்கொன்று நேருக்கு நேராக பயங்கரமான சத்தத்துடன் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான குற்றாலத்தைச் சேர்ந்த என். கண்ணன் (40), உள்ளூர் பேருந்து ஓட்டுநர் கிருஷ்ணன் (35) ஆகியோருடன் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். ஓட்டு நர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் மாண்டனர். மீதமுள்ள பயணிகள் 35 பேரும் பலத்த காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து, வடிவில் சற்று உயரமாக இருந்ததால் நேருக்குநேர் மோதிய வேகத்தில் உயரமாக இருந்த தனியார் பேருந்துக்குள் பாதிக்குப் பாதி நுழைந்து சிக்கிக் கொண்டது. இதனால் உள்ளூர்ப் பேருந் தில் பயணம் செய்த பயணிகள் அதிகமானோர் பலியாயினர் என்று கூறப்படுகிறது. தனியார் பேருந்தில் மொத்தம் 4 பேர் தான் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வளநாடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 90,854 பேர் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர். அவர்களில் 15,409 பேர் மாண்டுள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 64,996 சாலை விபத்துகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென் னையில் மட்டும் 5,133 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகத்தின் புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. இவற்றுள் அதிகமான விபத்து களுக்கு மனிதத் தவறே காரணம் என்று அறியப்பட்டுள்ளது.

1 comments:

said...

நான்கு வழிச்சாலைகள் வந்தபிறகு விபத்துகள் அதிகமாகிவிட்டன.காரணம் U-டர்ன் வளைவுவரை சென்று திரும்ப சோம்பேரித்தனம் கொண்டு சாலை விதிகளை மீறி ஒருவழிப் பாதையில் எதிராக வருவதுதான்.இவ்வாறு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் விபத்துக்கள் குறையும்.---
தி.தமிழ் இளங்கோ